தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று – வள்ளுவன்
பள்ளி
செங்கல்பட்டு மாவட்டத்தில் புனித சூசையப்பர் பள்ளியில் கல்விகற்றுத் தேர்ந்தேன். எனது ஆசிரியர்கள் எல்லோரும் மிகச் சிறந்தவர்கள் (ஆனால் நான் படிக்கும் போது அப்படி நினைக்கவில்லை) ஆங்கிலத்தில் மிகவும் நாட்டம் கொண்டு முடிந்தவரைக் கைதேர்ந்தேன்
கல்லூரி மற்றும் பட்டையப் படிப்பு
பட்டையப் படிப்புக்காகக் கல்லூரிக்கு மிகக் குறைவாகவே சென்றேன். இருப்பினும் என் முதுநிலை பட்டையப் படிப்பை முடிப்பதற்கு என் பேராசிரியர்கள் உதவி செய்தனர். அவர்களை என்றும் மறவேன்
உத்தியோகம்
நான் வேலை செய்யாத நிறுவனமே இல்லை என்று சொல்லலாம். நேர்மை, நியாயம் என்று ராஜினாமா செய்வதில் குறியாய் இருந்தேன். பல நபர்கள் என்னை நேர்த்தி செய்துள்ளனர் அதில் குறிப்பாக இன்று வரை என்னை வழிநடத்தும் ரகுவம்ச சுதாவிற்க்கு நன்றி
தமிழ்த் தாய் என்னைச் சிறிது சிறிதாக அவள் பக்கம் இழுத்தாள். வள்ளுவன், பாரதி, ஆழ்வார்கள்..இவர்களைப் பற்றி நான் சொல்ல ஏதுமில்லை..இவர்களைப் பற்றிச் செல்ல நாதியில்லை
பொன்னியின் செல்வன் – இப்படியும் கதை சொல்ல முடியுமா. அர்த்தமுள்ள இந்துமதம் – கவிச் சக்கரவர்த்தியின் கண்ணீர்த் துளிகள். பலருக்கு குருவாய் நின்ற வாலி அவன் ஆசிபெற்ற நா.மு. வரை தமிழின் இலக்கியச் சுவை என்னை அடிமையாக்கியது.
இன்னும் ஒரு அரிசி அளவு கூட நான் கற்றுத் தேரவில்லை தமிழென்னும் நெற்க் களஞ்சியத்திலே
முதல் அவர்களாய் இருந்தாலும், முடிவில் என்னை பெற்றோர்க்கு (முயற்சி செய்கிறேன்)